Print this page

வருந்துகிறோம்-ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் மரணம்.குடி அரசு - இரங்கல் செய்தி - 15.01.1933 

Rate this item
(0 votes)

9-1-33 இரவு செங்கற்பட்டு பிரபல வியாபாரியும், ஜமீன்தாரும், நிலச்சுவான்தாருமான தோழர் ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் அவர்கள் சென்னையில் உயிர் துரந்தார் என்ற சேதியைக் கேட்டு மிக வருந்துகிறோம். இவர் செங்கற்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மகாநாட்டிற்கு மூல புருஷராயிருந்து நடத்தினவர். சீர்திருத்தத்துறையில் வெகு தூரம் முற்போக்கு டையவர். ஏழைகளிடத்தில் மிகுதியும் அன்பும் இரக்கமும் உடையவர். இவர் இறந்தது அந்த ஜில்லாவாசிகளுக்கு ஒரு பெருங்குறைவேயாகும். 

குடி அரசு - இரங்கல் செய்தி - 15.01.1933

Read 25 times